மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலமைப்பு தொடர்பாக கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனம் அறிக்கை!

- Advertisement -

20ஆவது திருத்தத்தை தொடர்ந்தும் முன்னோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், 20ஆவது திருத்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக, அது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனி ஒரு நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவது ஜனநாயக நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்குக் காணப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பொதுமக்களின் உண்மையான விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புதிய அரசியலமைப்பை உருவாக்க இந்த சந்தர்ப்பத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், முழு நாடாளுமன்றமும் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாவீரர் தினம் குறித்து செய்தி வெளியிட்டோருக்கு நடந்தது என்ன? பொலிஸார் விளக்கம்!

மாவீரர் தினத்தை போற்றும் வகையில், சமூக வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த நபர்கள் செங்கலப்படி பகுதியில் வைத்து, நேற்றைய தினம் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக,...

35 ஆவது பொலிஸ்மா அதிபராக பதவியேற்கின்றார் சி.டி விக்ரமரத்ன!

இலங்கை பொலிஸ் சேவையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக, சி.டி விக்ரமரத்ன இன்றைய தினம் பதவியேற்கவுள்ளார். இதற்கமைய, அவர் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப்...

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Developed by: SEOGlitz