மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் கைது விவகாரம் : நீதிமன்றம் நிராகரிப்பு!

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வது தொடர்பான கோரிக்கையினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும் குறித்த விடயம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நீதிமன்றப் பிடியாணையொன்றைப் பெற்று அவரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி, வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

PCR தொடர்பில் பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் முன்வைக்கும் குற்றச்சாட்டு!

பண்டாரகம - அட்டுலுகம பகுதியில், பல தரப்பினர் PCR பரிசோதனையை தவிர்த்து செயற்படுவதாக பண்டாரகம பிரதேச சபைத் தலைவர் தேவேந்திர பெரேரா தெரிவித்துள்ளார். அட்டுலுகம பகுதியில் இதுவரை 164 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக...

பிரான்ஸ் பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி இடைநிறுத்தம்- காரணம் என்ன?

பிரான்ஸில் PARRIS நகரில்  கறுப்பு இனத்தவரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அந்தநாட்டு பொலிஸ் அதிகாரிகள் மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் கருப்பினத்தைச் சேர்ந்த இசைத் தயாரிப்பாளர் ஒருவரை PARRIS பொலிஸ் அதிகாரிகள் தாக்கிய சம்பவம், காணொளி...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று!

கடல்சார் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை இம்முறை நடத்தும் வாய்ப்பை இலங்கை...

Developed by: SEOGlitz