மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பு வைத்தியசாலை தாதிக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எஸ்.மயூரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக எமது கெப்பிட்டல் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த அவர்,

- Advertisement -

“மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் குறித்த தாதி விடுமுறையில் கம்பஹாவை கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்டவர்.

குறித்த பெண் தாதி உத்தியோகத்தருக்கு, அவரது சொந்த ஊரான கம்பஹாவில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

வழமைபோன்று அவர் தனது கைக்குழந்தையையும் குடும்பத்தினரையம் பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறையில் கம்பஹாவிற்குச் சென்று வருவதுண்டு.

அந்த வழமையின் அடிப்படையில்தான் இந்த தாதி உத்தியோகத்தர் கடந்த 04ஆம் திகதி விடுமுறை பெற்றுக் கொண்டு தமது சொந்த ஊரான கம்பஹாவிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே கடந்த 09ஆம் திகதி அவரும் அவரது கைக்குழந்தையும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தாதி உத்தியோகத்தரான தாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் மட்டக்களப்பில் இருந்த போது கொரோனா தொற்று ஏற்பட்டதா என்பது குறித்த விபரங்கள் விசாரிக்கப்படுகின்றன. இது தொடர்பான தகவல்கள் நாளையே கிடைக்கப்பெறும்” என சுகாதார சேவைப் பணிப்பாளர் எஸ்.மயூரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz