மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்சாரத்துறையின் அபிவிருத்திக்கு ரஷ்யா உதவி!

- Advertisement -

இலங்கையின் மின்சாரத்துறையின் முன்னேற்றத்திற்காக அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் யூரி மதேரி இதனைக் குறிப்பிட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

- Advertisement -

மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ரஷ்யத் தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும், பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்துவதற்கும் ரஷ்யத் தூதுவர் இதன்போது விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது அனுபவம் மற்றும் பயிற்சி உட்பட தேவையான அனைத்து வசதிகளையும் இலங்கை அணுசக்தி அதிகாரசபைக்கு வழங்க,  ரஷ்யாவின் அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணைக்குழு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிலைபேறான அபிவிருத்தியை இலக்காக கொண்டு, இலங்கை மின்சாரத் துறையில் அரசாங்கத்தினால் செயற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள் குறித்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், புதுப்பிக்கத்தக்க சக்தி மீது,  சர்வதேசம் கவனஞ் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது வலியுறுத்தியதாக மின்சக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz