மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

- Advertisement -

கடந்த செப்டெம்பர் மாதம்  30 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து  அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரைவில் அறிவிக்கவுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன்,  கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ளவர்கள் புதிய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கான செயன்முறை பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார் .

மேலும், கொரோனா தொற்று காரணமாக சில மாவட்டங்களில் குறித்த செயன்முறை பரீட்சைகளுக்குத் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலைமைகளை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாவட்ட ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக  மோட்டார்வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் சந்தன மேலும்  தெரிவித்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz