மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்தவருக்கு கடூழியச் சிறை!

- Advertisement -

பாடசாலை மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றவாளி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

குறித்த சந்தேகநபர், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி, மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், மாணவி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவின் வகுப்பாசியரினால் முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி,  சட்டமா அதிபர் திணைக்களத்தினால், குறித்த சந்தேகநபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கமைய, குற்றப்பத்திரிகையின் ஊடாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இரண்டு குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதையடுத்தே, குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  பாதிக்கப்பட்ட மாணவிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் நட்ட ஈடு செலுத்துமாறும், நட்ட ஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் ஒரு வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும்,  அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும்,  பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாத காலம் கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz