மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படும் : ரமேஷ் பத்திரன!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்  வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகையின்போதும் கடைபிடிக்கப்படுவதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், வெளிநாட்டு பிரஜைகளின் வருகை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுகளுக்கு பதில் அளிக்கும்போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“சில நாடுகளின் கருத்துக்களுக்கமைய, விசேடமாக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் நீண்டகாலம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பதன் பின்னர் அவர் வேறு எந்தவொருவருடன் தொடர்புகள் இன்றி  ஏனைய நாடுகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்கள் பல உலகளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அதேபோன்று வெளிநாட்டு இராஜதந்திரிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக  நாட்டில் எவ்வாறு  சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதோ அதேபோன்று எமது பக்கம் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கமைய  வேறு எந்தவொரு சாமூகத்தொடர்பும் இன்றி குழுவாக பயணிப்பதற்கான சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத்தான் இவ்வாறான தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் என்ற ரீதியில் சில வெளிநாட்டு பிரதிநிதிகளை சந்திக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது” என அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்காவில் மேலும் தீவிரமடையும் கொரோனா..!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 50...

மஹர சிறைச்சாலை விவகாரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்துள்ள கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ராகம வைத்தியசாலை தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே மேலும் கைதிகள் 107 பேர் உட்பட  சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக...

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

Developed by: SEOGlitz