மெய்ப்பொருள் காண்பது அறிவு

IPL தொடர் : Royal Challengers Bangalore வெற்றி!

- Advertisement -

13 ஆவது IPL தொடரின் 28 ஆவது போட்டியில்  Royal Challengers Bangalore அணி 82 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவில் நடைபெற்ற  இந்த போட்டியில் Royal Challengers Bangalore மற்றும் Kolkata Knight Riders ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

- Advertisement -

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய Royal Challengers Bangalore அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அணி சார்பாக, AB de Villiers ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு, அணித் தலைவர் விரோட் கோலியும் ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்ட நாயகனாக AB de Villiers தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள்!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

Developed by: SEOGlitz