மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட கடல் பகுதியில் பெருமளவு கஞ்சா மீட்பு!

- Advertisement -

இலங்கையின் வட கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நூறு கிலோகிராமுக்கும் மேற்பட்ட கஞ்சா போதைப் பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து  மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

- Advertisement -

சர்வதேச கடல் எல்லையிலிருந்துஇறங்குதுறையை நோக்கி வருகை தந்த டிங்கி படகொன்றை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த படகை சோதனையிடுவதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் படகிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த கடற்பகுதியில் பாதுகாப்புத் தரப்பினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், கடலில் மிதந்து கொண்டிருந்த ஐந்து பொதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையிலேயே, குறித்த பொதிகளில் இருந்து 111 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபர்கள் வருகை தந்த டிங்கி படகும், கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய, கைப்பற்றபட்ட பொருட்கள், கொவிட் 19 அச்சுறுத்தலைக் கருத்திக் கொண்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

வட கடல் பகுதியில் பெருமளவு கஞ்சா மீட்பு! 1 வட கடல் பகுதியில் பெருமளவு கஞ்சா மீட்பு! 2 வட கடல் பகுதியில் பெருமளவு கஞ்சா மீட்பு! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz