மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

- Advertisement -

போலந்தில் பணிக்குச் செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் விசேட அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தமக்கான தொழிலை உறுதிப்படுத்தப்படுத்திக் கொள்ளல் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் தொடர்பு கொண்டதன் பின்னரே, கட்டணங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

பல்வேறு தொழில்முகவர்கள், தொழில் பெற்றுத் தருவதாக கூறி,  நிதி மோசடியில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்தே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படிதொழிலுக்கான உடன்படிக்கை இன்றி கட்டணம் அறவிடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வீசா, தொழில் உடன்படிக்கை மற்றும் தொழில் அனுமதிப்பத்திரம் என்பன கிடைக்கப் பெறும் வரை, முகவர் நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், போலந்தில் தொழில் பெறுவது தொடர்பில் அறிந்துகொள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால சேவைப் பிரிவை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,  0112 87 99 01 அல்லது 0112 8 799 03 அல்லது  011 21 18 700 அல்லது 0112 88 05 00 என்ற இலக்கங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz