மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த சந்தேகநபர் தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் விசேட நடவடிக்கை!

- Advertisement -

பூகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

- Advertisement -

பூகொடை பொலிஸாரினால் நேற்று முன்தினம் 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, குறித்த சந்தேநபர் சுகயீனமுற்ற நிலையில், நேற்றைய தினம் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்

இந்த நிலையிலேயே, இது தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் முறையற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz