மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரப்பட்டியலில் முதலிடத்தினைப் பெற்ற ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!

- Advertisement -

உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Code Nast எனப்படும் பயண சஞ்சிகையின் 2020 ஆண்டுக்கான வாசகர்களின் தேர்வுகளுக்கு அமைவாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, குறித்த பட்டியலில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், அவுஸ்திரேலிய கொன்டாஸ் விமான சேவை நிறுவனம் 5 ஆவது இடத்தையும், நியூசிலாந்தின் விமான சேவை 4 ஆவது இடத்தையும்,  கட்டார் விமான சேவை 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

மேலும், எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் இரண்டாவது இடத்தையும், அதேபோன்று சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் முதலாவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz