மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து ஒரு தொகுதியினர் வெளியேற்றம்!

- Advertisement -

முப்படையினரால் நடத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இன்றையதினம் 547 பேர் வெளியேற்றப்படவுள்ளனர்.

கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், 51 ஆயிரத்து 480 பேர் இதுவரை தமது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளனர்.

அத்துடன், 10 ஆயிரத்து 281 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றை அடையாளங் கண்டும் நோக்கில்,  நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 6 ஆயிரத்து 648 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இதுவரை மூன்று இலட்சத்து 35 ஆயிரத்து 752 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த நபர்களே இவ்வாறு குணமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை குணமடைந்தேரின் எண்ணிக்கை மூவாயிரத்து 317 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், ஆயிரத்து 514 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நிவார் சூறாவளி தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலைக்கொண்டுள்ள நிவார் சூறாவளி, காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 213 கிலோமீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிக்கையில் இந்த விடயம்...

மேலும் சில இடங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!

முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டமா திணைக்களத்தின் சமர்ப்பனத்திற்கமைய  இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில்...

நுரைச்சோலை – லக்விஜய மின்நிலையம் தொடர்பான விசேட தீர்மானம்!

நுரைச்சோலை - லக்விஜய மின்நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் மதிப்பாய்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையையும் இணைத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லக்விஜய மின்நிலையம் மற்றும் அது தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கோப் குழு நேற்று...

மைத்ரிபால விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

கண்டி நகர் பாடசாலைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பு

கண்டி நகரில் அமைந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிவரை குறித்த பாடசாலைகள் முடப்படுவதாக மத்திய மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் கொரோனா வைரஸ்...

Developed by: SEOGlitz