மெய்ப்பொருள் காண்பது அறிவு

கந்தானை மின்சார நிறுவன ஊழியர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கு விசேட நடவடிக்கை!

- Advertisement -

கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஜா-எல – கந்தான பொது சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி.என்.ஜயக்கொடி தெரிவித்துள்ளனர்.

கந்தானை இலங்கை மின்சார (தனியார்) நிறுவனத்தில் (LECO) கடமையாற்றி வரும் 12 பேருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கெப்பிட்டல் செய்திப்பிரிவிற்குத் தெரிவித்தார்.

- Advertisement -

மினுவங்கொட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு பெண்ணின் தந்தை குறித்த கந்தானை இலங்கை மின்சார நிறுவனத்தில் தொழில்புரிந்து வருகின்றார்.

மின்சார நிறுவன பணியாளர்கள் 13 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில், 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளையதினம் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர் ஜே.ஏ.டி.என்.ஜயக்கொடி மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz