மெய்ப்பொருள் காண்பது அறிவு

உத்தரவாத விலைக்கு உழுந்தினைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

- Advertisement -
உத்தரவாத விலைக்கு உழுந்தினைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உழுந்திற்கான உத்தரவாத விலை குறைவடைந்தால் கமநல அபிவிருத்தித் திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும்.
இலங்கையில் அதிகளவான உழுந்து உற்பத்தியில் ஈடுபடுவது வவுனியா மாவட்டமாகும். தற்போது ஒரு கிலோ உழுந்தின் விலை 800 ரூபாய்க்கு மேல் உள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.
எனினும் அறுவடையின் போதும் உத்தரவாத விலையேனும் விவசாயிகளிற்கு கிடைப்பதில்லை. கடந்த காலத்தில் ஆகக்கூடுதலாக ஒரு கிலோ 140 ரூபாவிற்கே விற்க முடிந்தது.
இம்முறை 2020/2021 பெரும்போகத்தின் போது அரசின் உத்தரவாத விலையான கிலோ ஒன்றிற்கு 220 எனும் தொகையினை விடக் குறையுமாயின் வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அதனை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யும் எனவே பயமின்றி இம்முறை உழுந்து உற்பத்தியினை மேற்கொள்ளுங்கள்.
கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையிடம் இருந்து உழுந்து செய்கைக்கான காப்புறுதியை செய்து கொள்ள முடியும். இது தொடர்பான தகவல்களுக்கு உதவி பணிப்பாளர்-கதிர்காமநாதன்- 0779779038 அவர்களது குறித்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
ஒரு ஏக்கருக்கு 50,000/= வரையான காப்புறுதி தொகைக்காக 2,250/= இனை கட்டண தொகையாக செலுத்தி கட்டாயமாக பயிர் காப்புறுதியினை மேற்கொள்ளுங்கள். விதை உழுந்தினை வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் விதைகள் மற்றும் நடுகை பொருட்கள் பிரிவில் பெற்றுக்கொள்ளலாம்” என கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ.விஜயகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz