மெய்ப்பொருள் காண்பது அறிவு

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள விசேட தீர்மானம்!

- Advertisement -

இந்த ஆண்டுக்கான Bangladesh Premier League போட்டிகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் Bangladesh Premier League போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், Bangladesh Premier League போட்டித் தொடரில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் எனவும், அதனைக் கையாள்வது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தொடருக்காக வருகை தரும் வெளிநாட்டு வீரர்களை நவீன முறையில் தனிமைப்படுத்துவது தமக்கு மேலும் அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும் எனவும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், Bangladesh Premier League போட்டித் தொடரை அடுத்த ஆண்டு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் வீரர்களை உள்ளடக்கிய 50 ஓவர் சுற்றுத் தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

அமெரிக்காவில் மேலும் தீவிரமடையும் கொரோனா..!

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 892 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் நாளாந்தம் ஒரு இலட்சத்து 50...

மஹர சிறைச்சாலை விவகாரம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்துள்ள கைதிகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. ராகம வைத்தியசாலை தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. இதனிடையே மேலும் கைதிகள் 107 பேர் உட்பட  சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக...

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

Developed by: SEOGlitz