மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை!

- Advertisement -

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் 12 வைத்தியசாலைகளில் 253 படுக்கைகள் மாத்திரமே தற்போது எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் 12 பிரதான வைத்தியசாலைகளில் ஆயிரத்து 581 படுக்கை வசதிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் தற்போது ஆயிரத்து 328 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வைத்தியசாலைகளில் அதிக படுக்கை வசதிகளைக் கொண்ட நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் காணப்படும் 400 படுக்கைகளில் 157 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 120 படுக்கை வசதிகளை கொண்ட கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 160 பேர் இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த வைத்தியசாலைகளில் தற்போது 253 படுக்கை வசதிகள் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்தியசாலைகளில் காணப்படும் படுக்கைகளின் எண்ணிக்கையை 3 ஆயிரம் வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக, தொற்று நோய் தடுப்பு பிரிவு முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடன் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் – டொனால்ட் ட்ரம்ப்

நேர்மையான வெற்றியை நிரூபித்தால் மாத்திரமே ஜோ பைடனுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா வைரஸ்  அச்சநிலைமை காரணமாக  வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள்  277 பேர் நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா சென்றிருந்த இலங்கையர்கள்  ஐந்து விசேட விமானங்களில் இன்று அதிகாலை இவ்வாறு நாடு...

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 821 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் – அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குவதற்கு தடை

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக பட்ட கற்கைநெறிக்கான அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சான்றிதழ்களை வழங்குவதற்கான...

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

Developed by: SEOGlitz