மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் இராணுவத்தளபதி அறிவிப்பு!

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு சில  பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

- Advertisement -

“மினுவாங்கொட ஆடைதொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் அனைவரும்  தற்போது சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஆயிரத்து 36 பேர் தொழிற்சாலை பணியாளர் ஆவர். ஏனைய 231 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்  ஆவர். பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக குறித்த அனைவரும்  அடையாளம் காணப்பட்டனர்.

குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதேவேளை   கடந்த 6 நாட்களில் 24 ஆயிரத்து 878 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளொன்றில் சுமார் 5 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை எம்மால் அவதானிக்ககூடியதாக உள்ளது.

எனவே   ஒரு சில பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியுள்ளளோம்.

கம்பஹா மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளுக்குட்படுத்தப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இதன் அடிப்படையில் கம்பஹா, கணேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கும் களனி வலயத்திற்குட்பட்ட ஜா எல கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கும் நீர் கொழும்பு வலயத்திற்குட்பட்ட திவுலப்பிட்டிய மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளுக்கும் இவ்வாறு ஊரடங்குச்சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது” என இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 208 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதன் மூலம், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 469 ஆக உயர்வடைந்துள்ளது.

Jaffna Stallions அணியில் விளையாடுவோர்கள் குறித்து முழு விபரம் உள்ளே!

LPL தொடரில் பங்குபற்றவுள்ள Jaffna Stallions இறுதி அணி. 1. Thisara Perera ( தலைவன் ) 2. Suranga Lakmal 3. Dhananjaya De Silva 4. Avishka Fernando 5. Wanindu Hsaranga 6. Shoaib Malik (...

கற்றல் செயற்பாடுகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை பயன்படுத்துவது தொடர்பில் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு!

தற்போதைய நிலையில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொலைக்காட்சி சேவைகளை முழுமையாக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது இணையவழி கல்வி முறைமையே இடம்பெற்று வருகின்றது. இது...

பிராந்திய செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு கோரிக்கை!

பிராந்திய செய்தியாளர்களுக்கான ஓய்வூதிய வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசறை – நமுனுகல பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா!

பசறை - நமுனுகல - கனவரெல்ல 13 ஆம் மைல்கல் பிரதேசத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேல்மாகாணத்திலிருந்து அண்மையில் குறித்த பிரதேசத்திற்கு சென்ற ஒருவருக்கு கடந்த 19 ஆம் திகதி கொரோனா...

Developed by: SEOGlitz