மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.கல்வியற் கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்!

- Advertisement -

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள்  அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாயில் அமைந்துள்ள தேசியக் கல்வியற் கல்லூரி மாணவர் விடுதி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட உள்ளதன் காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம்  நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

- Advertisement -

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்தில் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம், இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலையில்  சுமார் எட்டு பேருந்துகளில் 71 ஆண் ஆசிரிய மாணவர்களும் 304 பெண் ஆசிரிய மாணவர்களும் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்தோடு கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றுவதற்கு இராணுவத்தினரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.கல்வியற் கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்! 1 யாழ்.கல்வியற் கல்லூரி விடுதிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

எதிர்பாராத வெற்றியை தன்வசப்படுத்தியது Colombo Kings…!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் Colombo Kings அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது. ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற...

கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு பேர் உயிரிழப்பு – இன்றைய நிலவரம் முழுமையாக…

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்ந 76 வயதுடைய...

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

Developed by: SEOGlitz