மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை விடுவிக்க நடவடிக்கை!

- Advertisement -

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டுள்ள இரு கிராமங்களையும் இன்று மாலை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“பட்டித்தோட்டம் மற்றும் மன்னார் பெரியகடை போன்ற பகுதிகளை தற்காலிகமாகவே மூடியுள்ளோம்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் திகதி மாவட்ட பொதுவைத்திய சாலையில் ஒருவருக்கு பி.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 9 ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபருடன் ஒன்றாக இருந்து முதலாவது நபர் என அடையாளம் காணப்பட்ட 41 பேரூக்கு பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்களின் 8 பேரூக்கு இது வரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த 8 பேரூக்கும் மீண்டும் சீ.பி.ஆர். பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது.

இதனை விட இவர்களுடன் தொடர்பு பட்ட இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என கூறப்படுகின்றவர்களுக்கு பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இது வரை முதல் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட 103 பேரும், இரண்டாம் நிலை தொடர்பு உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் 150 பேரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்று உறுதி என அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 7 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கட்டிட நிர்மாண பகுதியில் தங்கி உள்ளனர்.

அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை மாலை குறித்த பகுதிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரஷ்யாவின் கொரோனா தொற்று குறித்த முழு விபரம்!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி ரஷ்யாவில் இன்றைய நாளில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 23ஆயிரத்து 675 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்  507 உயிரிழப்புக்கள்...

தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ள ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷ்யாவுடனான தொடர்புகள் குறித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவிடம் உண்மைக்கு புறம்பான  தகவல்களை வெளியிட்டமை தொடர்பாக...

பெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல் செய்த பொறியியலாளர் பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்பஹா – உடுகம்பொல வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  

48 MP Quad AI கெமெரா, 5000mAh மின்கலம், 4GB RAM + 128GB ROM உடன் Huawei Y7a இலங்கையில்

உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான Huawei, அண்மையில் நடுத்தர வகை ஸ்மார்ட்போன் ஆன Y7a ஐ அறிமுகப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி அது இலங்கையில் உச்ச அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்கள் மற்றும் மொபைல் விளையாட்டாளர்களுக்கு...

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது…

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 485 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து  குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447 ஆக...

Developed by: SEOGlitz