மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா வைரஸ் பரவல் குறித்து வெளியான புதிய தகவல்!

- Advertisement -

கொரோனா வைரஸ் 28 நாட்களுக்கு மேற்பரப்புகளில் காணப்படும் என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாணயத் தாள்கள், தொலைபேசி திரை மற்றும் இரும்பு போன்ற மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் இவ்வாறு 28 நாட்களுக்கு காணப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

இதன்படி, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக நாட்கள் கொரோனா வைரஸ் அதிக நாட்கள் உயிர்வாழ முடியும் என தெரியவந்துள்ளதாக, அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த சோதனை முடிவுகள் இருளில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளதாக, அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும், இருமல், தும்மல் மற்றும் உரையாடல் ஆகியவற்றின் மூலமே பரவும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேற்பரப்புகளில் காணப்படும் கொரோனா வைரஸ் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து விஞ்ஞானிகள் சிலர் தமது சந்தேகத்தை வெளியிட்டுள்ளனர்.

எனினும், புற ஊதாக் கதிர்களின் ஊடாக கொரோனா வைரஸ் கொல்லப்படும் என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை, காற்றின் மூலமும் கொரோனா வைரஸ் பரவக்கூடும் எனவும், ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றினால் மேலும் 213 பேர் அடையாளம் – சுகாதார அமைச்சு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பேலியகொடை கொரோனா கொத்தணியில் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளான...

ஜனாதிபதி மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோருக்கிடையில் இருதரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்படி, இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. பல்வேறு...

இவரிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவே இல்லை – STR இன் புதிய புகைப்படங்கள்!

லிடில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிலம்பரசன் தன்னுடைய புதிய படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்துக்கொண்டுள்ளார்.

மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். தளபதி விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக...

Developed by: SEOGlitz