மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும்  தயார் : பரீட்சைகள் ஆணையாளர்!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும்  தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கொரோனா வைரஸ்  தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் நேற்று  தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில் இன்று  கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

இன்று  முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு  இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள்  தோற்றவுள்ளனர்.

இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்தின் ஊடாகவும்  43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்தின் ஊடாகவும்  பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும்  ஏனைய  41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்களும் 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 12 விசேட  பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நான்காவது அகவையில் தடம் பதிக்கும் கெப்பிட்டல் எப்.எம்

கெப்பிட்டல் எப்.எம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் நாம் கடந்துவந்த இந்த மூன்று ஆண்டுகள் தொடர்பான விசேட பார்வை. தமிழ் பேசும் மக்களின் கலைத் தாகத்திற்கு விருந்தளிக்கும் வகையிலும், நாட்டின் அரசியல்,...

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Developed by: SEOGlitz