மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப்பரீட்சை ஏற்பாடுகள் தொடர்பாக விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

- Advertisement -

நாடளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும்  தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள்  ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அனைத்து பாடசாலைகளிலும் தொற்றுநீக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

கொரோனா வைரஸ்  தொற்று அச்சநிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று  தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

நாளை முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு  இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள்  தோற்றவுள்ளனர்.

இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டம் ஊடாகவும்  43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டம் ஊடாகவும்  பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை பரீட்சாத்திகளும்  ஏனைய  41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 648 பரீட்சை நிலையங்களும் 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் 12 விசேட  பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்ட கொரோனா தொற்றாளர்களுள் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு  தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி தொற்றுக்குள்ளான 147 பேர் நேற்றைய நாளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். மேலும்...

வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  பிரதிப்பொலிஸ்  மா அதிபர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை நேற்றைய நாளில் இடம்பெற்ற 6 வாகன...

மஹர சிறைச்சாலை தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட  மோதலில் சேதமடைந்துள்ள  பொருட் சேதங்கள் குறித்து இன்று மதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் பாரிய பொருட் சேதம்  ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறைச்சாலையில்...

Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி…!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் Kandy Tuskers அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில்,  Kandy Tuskers மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அக்கரைப்பற்று பகுதியில் 24 பேரும் திருக்கோவில் பகுதியில் மூவரும்  தமன...

Developed by: SEOGlitz