மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

- Advertisement -

மன்னார் மாவட்டம் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த பகுதிகளுக்குள் உட்பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

மன்னார் ஆயர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த  ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த  நபர் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

பசறையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

பசறை கணவரல்ல பிரதேசத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பிரதேச பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பிரதேசத்தில்...

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு!

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு சென்னை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது. மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை...

Developed by: SEOGlitz