மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியை இராணுவம் பொறுப்பேற்றது!

- Advertisement -

ஹட்டன், பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி, தற்காலிக தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த  கல்லூரியை இராணுவம் இன்று பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதேவேளை விடுதியில் தங்கியிருந்து கல்வி பயின்ற மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்   அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கென இராணுத்தினரின்   10 பஸ்களை ஈடுபடுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்  அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் மகிந்தவுடன் விசேட சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பிரதமரின் விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதியில் தங்கவைப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் தனிமைப்படுத்தலுக்காக நட்சத்திர விடுதி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுதீன் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக வீடு செல்வதற்கு முன்னர் தனிமைப்படுத்தல்...

Developed by: SEOGlitz