மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதான தொழிற்சாலைகள் அனைத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

- Advertisement -

மினுவாங்கொடை  ஆடைத்தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தற்போது சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய்  தடுப்பு  பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண் ஊழியர்கள் மூவர்  கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பிரதான தொழிற்சாலைகள் அனைத்திலும் பி.சி.ஆர்  சோதனை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பணியாளர்கள் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர்கள் கண்டி, கட்டுநாயக்க எவரிவத்த, படல்கம, ஜா எல, தங்கொட்டுவ ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடயாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz