மெய்ப்பொருள் காண்பது அறிவு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கவனத்திற்கு

- Advertisement -

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதன்படி   இன்று இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு  3 லட்சத்து 31 ஆயிரத்து 694 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

- Advertisement -

நாடளாவிய ரீதியில்   2 ஆயிரத்து 936 பரீட்சை  மத்திய நிலையங்களில்  பரீட்சை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை மத்திய நிலையங்களின் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுகாதார பரிந்துரைகளுக்கமைய பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் உட்பட  கல்வி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன்,   நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள  கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு இம்முறை 2 லட்சத்து 77 ஆயிரத்து 580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 85 ஆயிரத்து, 244 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.

குறித்த பரீட்சைகள் 2 ஆயிரத்து 648 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புலமைப்பரிசில் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 நாட்டில் கொரோனா தொற்றுக்குறித்த அச்சநிலை காணப்படுவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

 இதன்படி, உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இந்த போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

 இதேவேளை, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்றை,  தொலைபேசியில் படம் பிடித்து வைத்துக் கொள்ளுமாறு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனினும், பரீட்சைக்குச் செல்லும் மாணவர்களை பரிசீலிப்பதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

அவசரத் தேவைகளைக் கருத்திற் கொண்டே, பரீட்சை அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்றை தொலைபேசியில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.

(பரீட்சை அனுமதி அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும். எனினும் அவசர தேவைகளுக்காக காண்பிப்பதற்கு குறித்த அனுமதியை அட்டையை படம்பிடித்து  தொலைபேசி அல்லது டெப் அல்லது வேறு ஏதேனும் இலத்திரனியல் சாதனமொன்றில் வைத்துக் கொள்ளுமாறு, தரம் ஐந்து மாணவர்களிடமும் உயர்தர மாணவர்களிடமும் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே இது தேவையாகியுள்ளது. எனினும் ஊரடங்கு அனுமதியை பரிசீலிக்க பரீட்சைக்கு செல்கின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளை இடைநடுவில் நிறுத்தி சோதனை செய்ய நாம் எதிர்பார்க்கவில்லை. இருந்த போதிலும் அவசர தேவைகளுக்காக பிரதியொன்றை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் தமது பிள்ளைகளை பெற்றோர் அழைத்து செல்லலாம்.  ஆனால் ஊரடங்கு உள்ள பகுதிகளில் ஒரு பிள்ளையுடன் மூன்று நான்கு பேர் செல்ல வேண்டாம். எனினும் ஊரடங்கு இல்லாத பகுதிகளிலும் பிள்ளைகளுடன் செல்கின்ற நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.)

 இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு பரீட்சைக்காக செல்லவிருந்த மாணவர்களுக்காக பன்னிரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

குறிப்பாக களனி, கம்பஹா, மினுவாங்கொடை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கல்வி வலயங்கள் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தொடர்பிலும் விசேட கவனஞ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, இந்த பரீட்சை நிலையங்களுக்கு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும், உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் செல்ல முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சை நிலையங்களின் பாதுகாப்புக்காக 7000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணனேசர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஊரடங்கு பகுதிகளில் இரண்டு பரீட்சைகளுக்காகவும் செல்லவுள்ள மாணவர்கள் அந்தந்தப் பொலிஸ் பிரிவுகளில் உள்ள விசேட பரீட்சை நிலையங்களுக்கே செல்ல வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஷாமல் செனரத் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு பரிந்துரை

ஐக்கிய தேசியக் கட்சியின்  பொதுச் செயலாளர் பதவிக்கு  வட  மேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  ஷாமல் செனரத்  பெயரிடப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதிவியில் இருந்து முன்ளாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Developed by: SEOGlitz