மெய்ப்பொருள் காண்பது அறிவு

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

- Advertisement -

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம் திகதி (03-10-2020) தொடக்கம் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துக்களுக்கும்  முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

பரந்தன் பூநகரி வீதியில்   பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றருக்கு அண்மையாக உள்ள 11/5 இலக்க இரும்பு  பாலம் ஒன்றில் ஏற்பட்ட திருத்த வேலைகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும், இக்காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்த எந்த வாகனங்களும் குறித்த வீதியினை பயன்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz