மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

- Advertisement -
கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி குறித்த கிராம மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் தடுப்பு அணை ஒன்றினை அமைக்கக் கோரியே கொக்குப் படையான் கிராமத்து மக்கள் கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொக்குப்படையான் மீனவ கிராமங்கள் வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருவதால் அப்பகுதி கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது.
இதனையடுத்தே உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து அழியும் நிலையில் உள்ள கிராமத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தருமாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுத்து கடலரிப்பு ஏற்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மக்கள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! 1 கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! 2 கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! 3 கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! 4
- Advertisement -

தொடர்புபட்ட செய்திகள்

Related News

IPL தொடரின் மாபெரும் அணிகளுக்கிடையிலாக போட்டி இன்று!

13 ஆவது IPL தொடரின் 51 மற்றும் 52 ஆவது போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன. இதன்படி, 51 ஆவது போட்டி Delhi Capitals மற்றும் Mumbai Indians ஆகிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ளது. இந்த போட்டி,...

நாட்டின் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும்!

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றானது மேலும் தீவிரமைடயும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் பரவல் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில்...

நாட்டில் மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சுகாதார தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 399...

வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு...

முற்றாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது!

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ருந்த ஹட்டன் - டிக்கோயா நகரின் ஒருபகுதி மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொற்று நீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் சில கடைகளை திறப்பதற்கு சுகாதார தரப்பினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றாளர்...

Developed by: SEOGlitz