மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு சிறை! இன்று வெளியாகின்றது விசேட வர்த்தமானி..

- Advertisement -

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கமைய, குறித்த விசேட வர்த்தமானியில், அமைச்சர் இன்றையதினம் கையெழுத்திட்டதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

- Advertisement -

இதன்படி, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, புதிய வர்த்தமானியின் படி,   சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி,

01.  வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் நபர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும்.

02 நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றருக்கு குறைவின்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படல் வேண்டும்.

03. நிலையங்களுக்கு உள்நுழையும் நபர்களின், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படல் வேண்டும்.

04. உள்நுழையும் நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொடர்பு கொள்ள முடியுமான வகையில் தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

05. மேலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் நிறுவனத்தின் பரப்பளவுக்கு ஏற்ற வகையில், நபர்களை அனுமதித்தல் போன்ற செயற்பாடுகளையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 62 பேர் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களில் 8 பேர் மட்டக்களப்பு நீதவான்...

கம்பஹாவில் இன்றைய தினத்தில் மாத்திரம் 39 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் இன்றைய தினம் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அவர்களில் 10 பேர், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடமையாற்றுகின்றவர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz