மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் : மருதபாண்டி ராமேஷ்வரன்!

- Advertisement -

ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“ரிஷாட் பதியுதீன் விரைவில் கைதுசெய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்.

19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனக்கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது. அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.

நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் 20 நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியன் பிரீமியர் லீக் : Kolkata Knight Riders – Kings XI Punjab இன்று பலப்பரீட்சை!

13 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் Sharjah சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இரவு 7.30 இற்கு ஆரம்பமாக உள்ளது. இதில்...

ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவலின் இரண்டாவது அலையின் வீரியத்தை  கட்டுப்படுத்தும் வகையில் ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்றில் இருந்து  இரவு 11 மணி முதல் இன்று காலை 6 மணி...

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

Developed by: SEOGlitz