மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாளை நீர் விநியோகத் தடை! விபரம் உள்ளே..

- Advertisement -

மொரட்டுவ பகுதியில் 12 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி மொரட்டுவ மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில்  நாளை இரவு  8 மணிமுதல் 12 மணிநேர  நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

- Advertisement -

மொரட்டுவ பகுதியில் உள்ள பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய  நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை  மேலும் தெரிவித்துள்ளது.

எனினும் மொரட்டுவ மாநகரசபைக்குட்பட்ட  சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே மொரட்டுவ  பிரதேசத்தில் எகொட உயன மற்றும் மோதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கம்பஹாவில் ஏனைய தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Slovakia யில் அமுல்படுத்தப்படவுள்ள கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள்!

ஐரோப்பிய நாடான Slovakia யில் கொரோனா தடுப்பு முடக்க  செயற்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த நிலையில் சுமார் 4 மில்லியன் மக்கள் பி.சி.ஆர் சோதனை நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz