மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகாதார அமைச்சு சற்றுமுன்னர் விடுத்துள்ள செய்தி

- Advertisement -

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலைகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, முகக் கவசங்களை அணிதல், ஒரு மீட்டர் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் மற்றும் கை கழுவுதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை சந்திக்கச் செல்லும் நடவடிக்கையை, முடிந்தளவு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பொருட்களை வழங்கும் சந்தர்ப்பத்தில், அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திக்காது, வேறு வழிகளில் அவற்றை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியவசிய வைத்திய தேவைகளுக்கு, அருகிலுள்ள வைத்தியசாலைகளை நாடுமாறும் பதில் சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் எஸ்.ஶ்ரீதரன் கேட்டுக் கொண்டுள்ளார்

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக காயமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்...

கொரோனா தொற்றினால் அதிகரிக்கும் உயிரிழப்பு – முழுமையான விபரம் உள்ளே…

நாட்டில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று இரவு உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, கலஹா...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

Developed by: SEOGlitz