மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித் வீட்டிற்கு விரைந்துள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவினர்! – விபரம் உள்ளே..

- Advertisement -

வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்  கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டிற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சென்றுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடன் தொலைபேசியில் உரையாடல் ஒன்றினை மேற்கொண்டமை குறிதது விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வைத்து குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தனது வழக்கறிஞர் மூலம் குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரத்தொட்டையில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன…

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ரத்தொட்டை நகரில் அமைந்துள்ள ஐந்து வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ரத்தோட்டை, கிரிமெட்டிய பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் ரத்தொட்டை நகரில் சஞ்சரித்துள்ளார். இதனை...

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு! சற்று முன் விடுத்த தகவல்!

கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது!

மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள்ளே இந்த...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 240 பேர் குணமடைவு!

முப்படையினால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து 240 பேர் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயலணி இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

சுங்க அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி!

சுங்க அதிகாரிகள் சிலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள போதிலும், கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களை வெளியேற்றும் நடவடிக்கைகள், ஓரளவு கட்டுப்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மேலதிக சுங்கப் பணிப்பாளர்...

Developed by: SEOGlitz