மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது : ஹர்ஷ டி சில்வா!

- Advertisement -

அரசாங்கம் சர்வதேச கடன்களை செலுத்த முடியாது, பாரிய நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“9 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது. ஏழு தசம் ஐந்து பில்லியன் டொலர் கையிருப்பில் இருந்தது. அதில் ஒரு பில்லியனை கடனை செலுத்துவதற்காக எடுத்தார்கள் 6.5 பில்லியன் டொலரே தற்போது கையிருப்பில் உள்ளது.

ஒக்டோபர் மாதம் செலுத்தப்பட்ட கடன் நாம் பெற்ற கடன் கிடையாது. 2020 ஒக்டோபர் மாதம் ஒரு பில்லியன் டொலர் கடன் செலுத்தினார்கள்.

அது அவர்கள் வாங்கிய கடனாகும்.2010 ஆம் ஆண்டில் நிவாட் கப்ரால் எடுத்த கடனொன்றையே 2020 இல் செலுத்தினார்கள்.இவ்வாறு வட்டியுடன் 2007 ஆம் ஆண்டு முதல் முறிகளை கொள்வனவு செய்ய ஆரம்பித்தார்கள்.

ஆனால் அந்தக் கடன் தொகையினால் அவர்கள் மேற்கொள்ள செயற்திட்டங்களின் ஊடாக எந்தவொரு வருமானமும் இல்லை.

ஏதேனும் ஒரு வகையில் முதலீடுகள் மூலம் இலாபம் கிடைக்கும் எனில், கடனை செலுத்த முடியும் என கூற முடியும். முதலீடுகளின் மூலம் இலாபம் இல்லாவிட்டால் எவ்வாறு அதனை செலுத்துவது? என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைமுதல் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகள்! விபரம் உள்ளே..

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. இதன்படி, ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகர எல்லைகள் வரை...

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 85 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பேலியகொடை மீன்சந்தை மற்றும் மீன்பிடி துறைமுகங்களுடன் தொடர்புடைய 85 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான...

நாளை முதல் இரயில் சேவைகள் அனைத்தும் இரத்து!

நாளை முதல் விசேட இரயில் சேவைகள் தவிர்ந்த அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதான மார்க்கம், புத்தளம் மற்றும் களணிவெலி ஆகிய மார்க்கங்களிலான அனைத்து அலுவலக மற்றும் பயணிகள் ரயில்...

இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

பொதுமக்களின் பாதுகாப்பினை  கருத்திற்கொண்டே  தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாகவும்  எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில் எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளர். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளர். இவ்விடயம் தொடர்பாக...

Developed by: SEOGlitz