மெய்ப்பொருள் காண்பது அறிவு

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தல்!

- Advertisement -

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான இறக்குமதி வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

தற்போது காணப்படும் வாழ்க்கைச் செலவு மற்றும் கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில், பெரிய டின் மீன் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 100 மற்றும் சீனி கிலோ ஒன்றின் விலை 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த அத்தியாவசியப் பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு அதிகமாக சதோசவில் கொள்வனவு செய்யும் போது, பருப்பு கிலோ ஒன்றினை 150 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேங்காய் அபிவிருத்தி சபை, குருணாகலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன கொழும்பு நகருக்கான தேங்காய் விநியோகத்தை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு சதோச விற்பனை நிறுவனத்தின் மூலம், தேங்காயை நியாயமான விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz