மெய்ப்பொருள் காண்பது அறிவு

மஸ்கெலியாவில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த சோகம்!

- Advertisement -

மஸ்கெலியாவில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த சோகம்! 1

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ப்ளூம்பீல்ட் தேயிலைத் தோட்டப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்தபோது மண் மேடு சரிந்து விழுந்ததிலே அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக  மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் பிரிவுக்கு உட்பட்ட ப்ளூம்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 29 வயதுடைய சுப்பிரமணியம் அமிலச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மஸ்கெலியாவில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த சோகம்! 2 மஸ்கெலியாவில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த சோகம்! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 360 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து வருகை தந்த...

CSK அணி குறித்து வெளியான தகவல்!

சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பமாட்டார் என, அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார. தற்போது நடைபெற்றுவரும் IPL தொடரில் பங்கேற்பதற்காக சுரேஷ் ரெய்னா ஐக்கிய...

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையுமில்லை: ம.வி.மு கருத்து!

20 ஆவது திருத்தம் ஊடாக பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS ·...

தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!

தேசிய பால் உற்பத்தியை 70 வீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த பால் தேவையில் 40 வீதம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களின் மூலமும், மிகுதி 60 வீதம் இறக்குமதி செய்யப்படும்...

பொதுமக்கள் சந்திப்பு தினம் குறித்து விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள் சந்திப்பு தினத்தில் மக்கள் முகம்கொடுக்கும் சிக்கல்கள் குறித்து அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. திங்கட்கிழமை பொதுமக்கள் சந்திப்பு தினமாக அரசாங்கத்தினால் பிரகடப்படுத்தப்பட்டுள்...

Developed by: SEOGlitz