மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து..!

- Advertisement -

ஜப்பானின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Yoshihide Sugaவுக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

அத்துடன், ஏற்கனவே காணப்படும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த, ஜப்பானின் புதிய Yoshihide Sugaவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும், ஜப்பானின் புதிய Yoshihide Sugaவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜப்பானின் புதிய பிரதமராக Yoshihide Suga இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் Shinzo Abe அண்மையில் பதவி விலகியதை அடுத்து, ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழவையில் காணப்படும் 462 பேரில் 314 பேர்,  Yoshihide Suga வுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆளுங்கட்சியைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையிலும்,  Yoshihide Sugaவுக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜப்பான் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, 71 வயதான  Yoshihide Suga, ஜப்பான் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடுதிரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில்...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

இந்த வருடத்துக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அனுமதிச் சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டு விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அனுமதிச் சீட்டுகள் ஏற்கனவே...

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்க வேண்டும் : ஜனாதிபதி தெரிவிப்பு!

ஒவ்வொரு பாடசாலைக்கும் நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிள்ளைகளின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை பராமரிக்க முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அண்மையில் மேற்கொண்ட விஜயத்தின்...

Developed by: SEOGlitz