மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்..!

- Advertisement -

நாட்டில் எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது 50 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும்  மூவர்  இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியுள்ள மூவருக்கு இவ்வாறு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை  3 ஆயிரத்து 287...

Developed by: SEOGlitz