மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

- Advertisement -

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த 405 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இரண்டு மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மூன்று விமானங்கள் ஊடக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், தொழில் நிமித்தம் மத்தியகிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில்  இருந்து 49 இலங்கையர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான E.K – 648 எனும் விமானம் ஊடாக இன்று அதிகாலை 1.30 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன், கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R-668 எனும் விமானம் ஊடாக டோஹா நகரில் இருந்து   64 இலங்கையர்கள் 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும், 292 பேர் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான U.L-226 எனும் விமானம் ஊடாக டுபாயில் இருந்து இன்று அதிகாலை 4.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz