மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொச்சிக்கடை  பகுதியில் 30 பேர் கைது!

- Advertisement -

நீர்கொழும்பு – கொச்சிக்கடை  பகுதியில் அமைந்துள்ள விழா மண்டபமொன்றில்  போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்  30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

நீர்கொழும்பு – கொச்சிக்கடை, கம்மல்தொட பகுதியில் பொலிஸாரினால்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடன் இருந்து கேரள கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொச்சிக்கடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, முன்னதாக பல சந்தர்ப்பங்களில், பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டம்!

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஏனைய...

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்ட நடைமுறை குறித்து அமைச்சரவை அனுமதி!

நாட்டில் ஐந்து மிகப் பெரிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்த விடயம் தொடர்பில் நீர்வழங்கல் அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஹெம்மாத்தகமை நீர்வழங்கல் திட்டம், ருவான்வெல்ல நீர்வழங்கல்...

குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 முன்னெடுக்கப்படும்!

நாட்டின் குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு நடவடிக்கை எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் 10 வருடங்களுக்கு ஒருமுறை, குடிசன மற்றும் வீடமைப்பு தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கணக்கெடுப்பு கட்டளை...

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

Developed by: SEOGlitz