மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபல அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் திடீரென உயிரிழப்பு!

- Advertisement -

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் 59 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இந்தியத் தூதரகம் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டீன் ஜோன்ஸ் மும்பையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின் வர்ணனை கடமைகளை நிறைவேற்ற இந்தியாவில் தங்கியிருந்த ஜோன்ஸ் திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீன் ஜோன்ஸ் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்துள்ளதுடன், அவுஸ்ரேலிய அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட அதிகாரிகள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் வத்தளை...

கம்பஹாவில் தொழிற்சாலை ஊழியர்கள் 452 பேருக்கு கொரோனா!

கம்பஹா மாவட்டத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் உள்ளிட்ட ஏனைய தொழிற்சாலைகளின் ஊழியர்கள்  452 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த அனைவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற நால்வருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றின் அச்சநிலைமைக் காரணமாக யாழ்ப்பாண நகரில் உள்ள சில கடைகள் சுகாதார துறையினரால் மூடப்பட்டுள்ளன. கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி...

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம்!

அமெரிக்காவில் அதிகளாவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 94 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில்...

போலந்தில் கடுமையாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள்!

போலந்து நாட்டில் கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Developed by: SEOGlitz