கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக அப்பகுதிக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விஜயம் செய்திருந்தார்.
குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேட்டறிந்து கொண்டார்.
நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக 83,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஆறு வருடங்கள் கடந்துள்ளன.
இந்நிலையில், இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு துறைமுக நகர திட்டத்தை பார்வையிட்ட பிரதமர் அங்குள்ள, பொது கடற்கரையில் அமைந்துள்ள அக்வா கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.