மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்தல விமான நிலையம் ஊடாகப் பயணிப்பவர்களுக்கு விசேட சலுகைகள்!

- Advertisement -

எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் கலந்துரையாடப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டில் இருந்து 2 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்  வெளியேறி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, நாட்டிலிருந்து வெளியேறுபவர்களில் 20 வீதமனவர்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, நாடளாவிய ரீதியில் இருந்து  மத்தல சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்களுக்கு விசேட சலுகை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz