மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான புதிய தகவல்!

- Advertisement -

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான ஆவணங்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட்டு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

அத்துடன், குறித்த ஆவணங்களை வெளிநாட்டு அச்சிடும் நிறுவனங்கள் ஊடாக அச்சிடுவதன் மூலம் நாட்டில் இருந்து பெருமளவு அந்நிய செலாவணி வெளிநாடுகளுக்குச் செல்வதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய, குறித்த ஆவணங்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிடுவதன் மூலம் நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை தக்கவைத்துக்கொள்ள முடியுமெனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை, கெரவலப்பிட்டிய மின்சக்தி நிலையத்தில் 300 மெகா வோட் மின்சாரத்தைக் கொண்ட இரண்டாவது ஒருங்கிணைந்த திரவ இயற்கை எரிவாயு மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே வாகன இறக்குமதிக்கு தொடர்ந்தும் தடை விக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சில தரப்பினரின் தேவைகளுக்கு இணங்கவே ஸஹ்ரான் ஹாசிம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானதன்...

சஜித்தின் இணைப்புச் செயலாளராக சமித் விஜேசுந்தர நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளராகவும், சிறப்புப் பிரதிநிதியாகவும் சமித் விஜேசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதற்கான நியமனக் கடிதம் சஜித் பிரேமதாசவினால் வழங்கிவைக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்வைத்து இந்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டமை...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 10 பேர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து வருகைத்தந்த 7 பேருக்கும், கட்டார், ஐக்கிய அரபு...

20 ஆவது திருத்தம் குறித்து பிரதமர் வலியுறுத்தல்….

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக எந்தவித சிக்கலும் ஏற்படாது என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 20 ஆவது...

பெருந்தோட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட மக்களின் பொருளாதார, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான எதிர்காலதிட்டங்கள் குறித்து...

Developed by: SEOGlitz