மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய போக்குவரத்து நடைமுறை : சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

- Advertisement -

கொழும்பு நகரில் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறி செயற்படும் சாரதிகளுக்கு  2 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஶ்ரீஜயவர்தனபுர மாவத்த, பேஸ்லைன் வீதி, ஹய்லெவல் வீதி  மற்றும் காலி வீதி ஆகிய பகுதிகளில் இவ்வாறு வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

வீதி ஒழுங்கை சட்டதை மீறுபவர்களுக்கு  14 குற்றச்சாட்டுக்களின் கீழ்   2 ஆயிரம் ரூபா  அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் பஸ், முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன   விசேட  வீதி ஒழுங்கை  ஊடாக பயணிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் கெமரா மற்றும் சிசிரிவி காணொளிகள் ஊடாக போக்குவரத்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பிரகாரம்  வார  நாட்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 600 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களுள் 172 பேருக்கு...

உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது- டி. இமான்….

தமிழ் சினிமாவின் பாடகர் டி.இமான் "நாங்கள் அனைவரும் உங்களை இழக்கின்றோம்" என தனது ஆழ்ந்த இரக்கங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO — D.IMMAN (@immancomposer) September...

Developed by: SEOGlitz