மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கிய திணைக்களத்தின் பணிகள்!

- Advertisement -

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் நடவடிக்கைககள் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்படி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும்  நடவடிக்கைககள் அடுத்த ஆண்டு ஜனவரி  மாதம்  முதலாம் திகதி தொடக்கம் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை தற்போது தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கைளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்திருந்த  யோசனை திட்டத்திற்கு  கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படைப்பில் இது தொடர்பான கலந்துரையாடல் இராணுவத்தளபதி லெப்டினன்  ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான பிரிவுகளுக்கு இராணுவத்தளபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பரந்தன் – பூநகரி பிரதான வீதி பூட்டப்பட்டது!

கிளிநொச்சி, பரந்தன் - பூநகரி வீதியூடான போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர்  சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி பரந்தன் பூநகரி வீதியூடாக எதிர்வரும் மூன்றாம்...

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் ஒழுங்காகச் செயற்படவில்லை : அரவிந்தகுமார்!

தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாகங்கள் முறையற்ற போக்கை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   CAPITAL...

வீதியை புனரமைத்து தருமாறு கோரி மடுல்சீமை மக்கள் ஆர்ப்பாட்டம்!

மடுல்சீம - மாதோவ பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். மடுல்சீம - பசறை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக பயணிப்போர், பாடசாலை மாணவர்கள் என...

கொக்குப்படையான் கிராம மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  கொக்குப்படையான் மீனவக் கிராமம்  கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை...

கொரோன தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமான் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Developed by: SEOGlitz