மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் கைது

- Advertisement -

இணையத்தளமூடாக நிதி மோசடியில் ஈடுபட்ட   வெளிநாட்டு பிரஜைகள்   14  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

நைஜீரிய மற்றும் சீன பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இணையதளமூடாக    இந்த குழுவினர்  60 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி  மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு   101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகம் மற்றும்  தகவல்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர்   லால் செனவிரட்ன  தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டலாபச்சீட்டுக்கள் ஊடாக பரிசினை வென்றுள்ளதாகவும் தெரிவித்து  குறித்த 14 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே  சந்தேகத்திற்கிடமான முறையில் அனுப்பிவைக்கப்படும்  மின்னஞ்சல்களை ஏற்றுக்கொள்வது தொடர்பில்  பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகம் மற்றும்  தகவல்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஹேமசிறி பெர்ணான்டோவின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : முன்னாள் ஜனாதிபதி மறுப்பு!

உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னேடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்த கருத்தினை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி...

ஹரீன் பெர்ணான்டோவினது கருத்து உண்மைக்குப் புறம்பானது : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ முன்வைத்த கருத்தினை  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மறுத்துள்ளார். அத்துடன், இந்த கருத்திற்கு...

மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு விசேட சலுகைகள்!

நாட்டில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு  விசேட சலுகை வழங்குவதற்கு...

பொதுஜன பெரமுனவில் இருந்து முக்கிய நபர் நீக்கம்!

பதுளை மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து ஆதர் சில்வா நீக்கப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதுளை மாநகர சபையின் தலைவர் பிரியந்த...

Developed by: SEOGlitz