மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் இன்று முதல் அமுல்!

- Advertisement -

பேருந்து முன்னுரிமைப் பாதை சட்டம் இன்று முதல் கொழும்பில் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அத்துடன், குறித்த சட்டத்தை மீறி செயற்படுகின்ற சாரதிகளுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டி – கொழும்பு வீதி, நீர்கொழும்பு – கொழும்பு வீதி,  காலி வீதி, ஹய்லெவல் வீதி மற்றும் நாடாளுமன்ற வீதி என பிரதான ஐந்து வீதிகளின் ஊடாக, கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகனங்களின் மூலம்,  பாரிய வாகன நெரிசல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வீதிகளின் ஊடாக நாளாந்தம் சுமார் ஐந்து லட்சம் வாகனங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில், ஶ்ரீ ஜயவர்தனபுர வீதி, பேஸ் லைன் வீதி, ஹய்லெவல் வீதி மற்றும் காலி வீதி என்பவற்றை அடிப்படையாக கொண்டு, பேருந்து முன்னுரிமை பாதை சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணிவரை இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒழுங்கையின் ஊடாகவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, குறித்த சட்டம் தொடர்பில் சாரதிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம், நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை திட்டம்!

தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலான திட்டமொன்று  தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் தேங்காய்களின் விலை உயர்வடைந்துள்ளமை தொடர்பில், தென்னைப் பயிர்ச்செய்கை...

நாட்டில் இயற்கையின் பாதிப்பு காரணமாக பாரிய உயிரிழப்புக்கள் பதிவு!

நாடு முழுவதும் ஏதேனும் ஓர் இடத்தில், இயற்கையின் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஆண்டுதோறும்  நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. மேலும், உயிரிழப்பைவிட, பல மடங்கு பொருளாதாரச் சேதமும் ஏற்படுகின்றது. பலர்,  தங்களது வாழ்விடங்களையும்,  ஆண்டுக்கணக்கில்...

கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக...

நாட்டில் கொரோனா தொற்று குறித்து முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் நேற்று இரவு அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. குவைத்திலிருந்து வருகைதந்த 7...

அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று!

COPA எனப்படும் அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. கோப் மற்றும் கோபா என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்ற குழு மற்றும் அரச கணக்காய்வு குழுவின் உறுப்பினர்கள் கடந்த...

Developed by: SEOGlitz