மெய்ப்பொருள் காண்பது அறிவு

விக்னேஸ்வரனுக்கு எதிரான மனு இன்றும் விசாரணைக்கு!

- Advertisement -

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் இன்றைய தினமும் இடம்பெறவுள்ளன.

இந்த மனுவில்,  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

- Advertisement -

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனினால் இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த மனு, மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினரால் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வட மாகாண சபையின் தலைமைச் செயலாளராக கடமையாற்றிய அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் மற்றும் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்னாள் செயலாளர் சிவலிங்கம் சத்தியசீலன் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனை அடுத்து, குறித்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக, இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

குவைத்தில் புதிய மன்னர் நியமனம்: அமைச்சரவை தீர்மானம்!

குவைத்தின் 16ஆவது புதிய மன்னராக, முடிக்குரிய இளவரசர் Sheikh Nawaf al-Ahmed பெயரிடப்பட்டுள்ளார். குவைத்தின் மன்னராகப் பதவி வகித்த Sheikh Sabah al-Ahmed al-Sabah, தனது 91 ஆவது வயதில் நேற்றைய தினம் உயிரிழந்ததை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கமைய, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் காணப்படும் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த விண்ணப்பங்களை மீள்பரிசீலனை செய்தல் மற்றும் அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு 05...

20 இற்கு எதிரான மனுக்களின் இரண்டாம் நாள் பரிசீலனை ஆரம்பம்

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆட்சேபித்து, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்,  குறித்த...

கட்டிடங்களை நிர்மாணிக்க புதிய முறைமை

ஆபத்தான கட்டிடங்களை அடையாளங்காண்பதற்கும், புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கும், புதிய முறைமையொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்கின்ற உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு, புவிச் சரிதவியல் மற்றும் அளவைப்...

Developed by: SEOGlitz